Total Pageviews

Wednesday 23 March 2011

மின்அஞ்சல் கணக்கு துவங்க உங்கள் நண்பருக்கு உதவுங்கள்


1   http://mail.google.com/mail/ லிங்கை click செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் தோன்றும் 


 Create on account ஐ கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது விண்ணப்ப படிவம் தோன்றும்


2      விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்


First Name: Last Name: 
மற்றவர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பும் போது கீழ்காணும் படத்தில் சிவப்பு நிறகோட்டிற்க்குள் இருப்பது போல் தோன்றும்.

Desired Login Name:
இதில்தான் நீங்கள் விரும்பும் மின்அஞ்சல் முகவரியை 
தட்டச்சு செய்ய வேண்டும். அதன் பின் check availability 
கிளிக் செய்யவேண்டும் உங்களுக்கு நீங்கள் தட்டச்சு 
செய்திருக்கும் பெயரில் உங்கள் மின் அஞ்சல் கிடைக்கும்
என்றால் available இல்லை என்றால் நீங்கள் முகவரியை 
மாற்ற வேண்டும்.

Choose a password:   Re-enter password:
இது தான் நீங்கள் கணக்கு பயன்படுத்த கொடுக்கும் இரகசி்ய
 பாதுகாப்பு கடவுச்சொல் இது குறைந்தது எட்டு எழுத்துக்கு
 குறையாமல் இருக்க வேண்டும். 

 Password strength: என்பதில் உங்களின் கடவுச்சொல்லின் 
வலிமையை குறிக்கிறது. இதில் weak என வராமல்
 பார்த்துக்கொள்ளவும்.

  Stay signed in 
என்பதில் டிக் செய்தால் உங்கள் கணிணியில் மின்அஞ்சல் முகவரி மற்றும் கடவச்சொல் சேமித்து வைக்கப்படும். நீங்கள் மின்அஞ்சல் முகவரி தளத்தினை திறக்கும் போது அது அதில் புதிதாக தட்டச்சு செய்ய தேவை இருக்காது. நண்பர்களின் கணிணி பயன்படுத்துவோர்கள் இதில் டிக் செய்யாமல் இருப்பது நல்லது.

 Enable Web History Learn More
இதை எதுவும்செய்யவேண்டாம். டிக் இல்லை எனில் டிக் எற்படுத்திவிடவும்

Security Question:  
Answer:
இதில் நீங்கள் தோ்வு செய்யும் கேள்விக்கு எற்ப்ப பதிலைதர வேண்டும் நீங்கள் கடவுச்சொல்லை மறந்திருந்தால் இந்த கேள்வி பதில்தான் கடைசி வழி இதன் மூலம் புதிய கடவுச்சொல் அமைக்க முடியும்.

Recovery email:
புதிதாக மின்அஞ்சல் தொடங்குபவர்கள் இதை அப்படியே 
விட்டுவிடுங்கள். இதை பூர்த்தி செய்ய தேவை இல்லை

Location:

இந்த கணக்கு தொடங்கும்போது நீங்கள் வசிக்கும் நாட்டின் 
பெயரை குறிப்பிடவும்.

Word Verification:
இது போல தோன்றும் படத்தில் இருக்கும் ஆங்கில பெரிய எழுத்து சிறிய எழுத்து மாறாமல் தட்டச்சு செய்யவும்.

இறுதியாக I accept Create my account என்ற பட்டனை அழுத்தவும்.

இறுதியாக கீழே உள்ள படம் தோன்றும் இதில் நாட்டின் பெயரையும் மொபைஎண்ணை கொடுக்கும் பட்சத்தில் மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து  சேரும் அதில்  



இதில் நாட்டின் பெயரையும் மொபைஎண்ணை கொடுக்கும் பட்சத்தில் மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து சேரும் அதில் verification code இருக்கும்.



அந்த codeஐ கீழே படத்தில் உள்ள type in sms code hereல் பதிந்து Verify பட்டனை அழுத்தவும் . 

கீழே காணும் பகுதி காணப்பட்டால் நீங்கள் மின்அஞ்சல் முகவரி தொடங்கிவிட்டீர்கள் . 
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.




2 comments: